செய்திகள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை: காலிறுதியில் ஹிமாசல பிரதேசத்துடன் தமிழ்நாடு மோதல்!

22nd Jan 2021 12:58 PM

ADVERTISEMENT

 

சையத் முஷ்டாக் அலி கோப்பை காலிறுதிச் சுற்றில் ஹிமாசல பிரதேசத்தை தமிழக அணி எதிர்கொள்கிறது. 

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றன. லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றன. 38 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அனைத்து அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடின. குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடியது. 

ஜனவரி 26 முதல் நடைபெறவுள்ள நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளிலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 29 அன்றும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.  இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ADVERTISEMENT

லீக் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தமிழக அணி வென்றது. இதையடுத்து ஜனவரி 26 அன்று ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள 2-வது காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசத்தை தமிழக அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி வென்றால், ராஜஸ்தான் - பிஹார் இடையிலான மோதலில் வெல்லும் அணியுடன் அரையிறுதிச் சுற்றில் போட்டியிடும். 
 

Tags : himachal pradesh Syed Mushtaq Ali Trophy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT