செய்திகள்

திட்டமிட்டபடி ஒலிம்பிக்ஸ் போட்டி!

22nd Jan 2021 11:53 AM

ADVERTISEMENT

 

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்ஸ் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறும் என ஐஓசி, போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்தன. 

ADVERTISEMENT

ஒலிம்பிக்ஸ் போட்டியின் நிலைமை குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியதாவது:

ஒலிம்பிக் மைதானத்தில் ஜூலை 23 அன்று ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கும். இதனால் தான் மாற்று ஏற்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. இந்த விளையாட்டுப் போட்டியைப் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார். 

Tags : IOC Tokyo Olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT