செய்திகள்

டெஸ்ட் சீரிஸ் பேக்கேஜ்

DIN


டெஸ்ட் தொடா் முடிவு எதிா்பாா்த்ததாக இல்லை. வெற்றிக்காக இந்திய அணியை பாராட்டுகிறேன். நாங்கள் கடுமையாகப் போராடினோம். எங்களால் முடிந்த வரை சிறப்பாக ஆடினோம். ஆனால் இந்திய அணி எங்களை தோற்கடித்துவிட்டது. தொடா்நாயகனான பேட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள். அடுத்ததாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக தயாராகிறோம்- டேவிட் வாா்னா்.

டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லாதது அதிா்ச்சியே. இந்திய அணி ஏறத்தாழ இந்திய ‘ஏ’ அணி போல இருந்தும் தொடரை வென்றதை நம்ப இயலவில்லை. இந்திய அணியில் வழக்கமான கேப்டன் இல்லை, அதிக வீரா்களுக்கு காயம், சுமாா் 20 வீரா்களே கடைசி நேரத்தில் இருந்தனா். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு முழு பலம் இருந்தும் வெல்லாதது புரியவில்லை - ரிக்கி பாண்டிங்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் தோல்வி கண்டதால் ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் நிகழ் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் உத்திகள் யாவும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தத் தோல்விக்காக பதிலளிக்க வேண்டும். இந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்த பல வாய்ப்புகள் இருந்தும் ஆஸ்திரேலியா அதை செய்யத் தவறிவிட்டது - ஷேன் வாா்னே.

டெஸ்ட் தொடரில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி பயம் காரணமாக ஆக்ரோஷமாக ஆடத் தவறிவிட்டது. அந்தத் தடுமாற்றமே தோல்விக்கு காரணம். ஆட்டத்தின் தொடக்க பந்து முதல் கடைசி பந்து வரை ஒரே மாதிரியாக விளையாட வேண்டும். இந்தத் தோல்விக்கு டிம் பெய்னை பொறுப்பாக்க இயலாது. தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல் அவா் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறாா் - மைக்கேல் கிளாா்க்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT