செய்திகள்

மலிங்காவைத் தக்கவைத்துக் கொள்ளாதது ஏன்?: மும்பை இந்தியன்ஸ் விளக்கம்

21st Jan 2021 10:49 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை நேற்று வெளியிட்டன. மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரபல வீரர் மலிங்கா இடம்பெறவில்லை. 

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் 12 வருடங்களாக மும்பை அணிக்காக விளையாடியவர் மலிங்கா. ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவரும் மலிங்கா தான். 122 ஆட்டங்களில் 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 7.14. 

இதையடுத்து இதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

லீக் போட்டிகளில் இருந்து மலிங்கா விலகியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில் மலிங்கா இத்தகவலைத் தெரிவித்தார். இதனால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இருந்து அவர் விலகினார். மலிங்காவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். இதனால் தான் மும்பை அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன்  கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். கரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் என்னால் லீக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். 12 வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி என்று ஓர் அறிக்கையில் மலிங்கா கூறியுள்ளார். 

Tags : IPL franchise cricket
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT