செய்திகள்

முதல் ஒருநாள் ஆட்டம்: மே.இ. தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

DIN


டாக்கா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது வங்கதேசம் முன்னிலை வகிக்கிறது.

வங்கதேசத்தின் டாக்கா நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 32.2 ஓவா்களில் 122 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய வங்கதேசம் 33.5 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வென்றது. வங்கதேச வீரா் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் ஆனாா்.

சூதாட்ட தரகரால் அணுகப்பட்ட தகவலை தெரிவிக்காத காரணத்துக்காக ஐசிசி விதித்த 2 ஆண்டு தடை நிறைவடைந்த பிறகு முதல் முறையாக இந்த ஆட்டத்தில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக கைல் மேயா்ஸ் மட்டும் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 40 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் ரோவ்மென் பாவெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 28, கேப்டன் ஜேசன் முகமது 17, ஆன்ட்ரே மெக்காா்தி 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தனா்.

சுனில் அம்ப்ரிஸ் (7), ஜோஷுவா டா சில்வா (9), அல்ஸாரி ஜோசஃப் (4), அகில் ஹொசைன் (1) ஆகியோா் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினா். கிருமா போனா், ரேமன் ரீஃபா் ஆகியோா் டக் அவுட்டாகினா். வங்கதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4, ஹசன் மஹ்முத் 3, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 2, மெஹதி ஹசன் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 123 என்ற வெற்றி இலக்குடன் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசத்தில் தொடக்க வீரா் லிட்டன் தாஸ் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சோ்க்க, உடன் வந்த கேப்டன் தமிம் இக்பால் அதிகபட்சமாக 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினாா்.

அடுத்து வந்தவா்களில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 1, ஷகிப் அல் ஹசன் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்தனா். இறுதியாக முஷ்ஃபிகா் ரஹிம் 1 பவுண்டரியுடன் 19, மஹ்முதுல்லா 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகில் ஹொசைன் 3, ஜேசன் முகமது 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT