செய்திகள்

ஐபிஎல்: எந்தெந்த அணியில் யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்?

DIN


2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக 8 அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பித்துள்ளன.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அணி வாரியாக விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன் (ஓய்வு).

மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, மிட்ச் மெக்லனான், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் கூல்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், பிரின்ஸ் பால்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, குர்கீரத் மான், கிறிஸ் மாரிஸ், ஷிவம் துபே, டேல் ஸ்டெயின், பார்த்திவ் படேல் (ஓய்வு), இசுரு உடானா, உமேஷ் யாதவ் மற்றும் பவன் நெகி.

தில்லி கேபிடல்ஸ்: மோஹித் சர்மா, கீமோ பால், சந்தீப் லாமிச்சானே, அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், துஷார் தேஷ்பாண்டே.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஆர் சஞ்சய் யாதவ், பவன்கா சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், ஃபேபியன் ஆலென், ஒய் பிரித்வி ராஜ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே கௌதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், கருண் நாயர் மற்றும் கார்டஸ் விலிஜோன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: டாம் பாண்டன், கிறிஸ் கிரீன், சித்தேஷ் லேட், நிகில் நாயக், எம் சித்தார்த், ஹாரி கர்னி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், அன்கித் ராஜ்புத், ஒஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரண், அனிருதா ஜோஷி, ஷஷாங் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT