செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை!

DIN

பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளில் இந்திய அணி இலக்கை அடைய 324 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்குர் 67, வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்தார்கள். ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று, ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன்கள் குவித்தது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 66.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 55, வார்னர் 48 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு மழையால் ஆட்டம் குறுக்கிட்டது. 

மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லயன் 13 ரன்களில் ஷர்துல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 9 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். ஷர்துல் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை. 5-ம் நாளில் மழை அனுமதித்தால் நமக்கு அட்டகாசமான தருணங்கள் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT