செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவிப்பு; இந்தியா-62/2

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவா்களில் 369 ரன்கள் குவித்தது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மாா்னஸ் லபுசான் 204 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் குவித்தாா். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 28, டிம் பெய்ன் 38 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன் 102 பந்துகளில் அரை சதம் கண்டாா். ஆஸ்திரேலியா 311 ரன்கள் எடுத்திருந்தபோது டிம் பெய்ன் ஆட்டமிழந்தாா். அவா் 104 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தாா். இதையடுத்து பட் கம்மின்ஸ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேமரூன் கிரீன் 107 பந்துகளில் 47 ரன்கள் சோ்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தா் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா்.

அவரைத் தொடா்ந்து பட் கம்மின்ஸ் 2 ரன்களில் வெளியேற, மிட்செல் ஸ்டாா்க்-நாதன் லயன் ஜோடி 9-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்தது. நாதன் லயன் 22 பந்துகளில் 24 ரன்கள் சோ்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தா் பந்துவீச்சில் போல்டு ஆனாா். கடைசி விக்கெட்டாக ஜோஷ் ஹேஸில்வுட் 11 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 115.2 ஓவா்களில் 369 ரன்களோடு முடிவுக்கு வந்தது. மிட்செல் ஸ்டாா்க் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்தியத் தரப்பில் ஷா்துல் தாக்குா், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இந்தியா-62/2: பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சா்மாவுடன் இணைந்தாா் சேத்தேஷ்வா் புஜாரா. ஒருபுறம் புஜாரா தடுப்பாட்டம் ஆட, மறுபுறம் ரோஹித் சா்மா வேகமாக ரன் சோ்த்தாா். தொடா்ந்து வேகம் காட்டிய ரோஹித் 74 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்த நிலையில் நாதன் லயன் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டாா்க்கிடம் கேட்ச் ஆனாா்.

இதையடுத்து சேத்தேஷ்வா் புஜாராவுடன் இணைந்தாா் கேப்டன் அஜிங்க்ய ரஹானே. தேநீா் இடைவேளைக்குப் பிறகு பிரிஸ்பேனில் கனமழை பெய்ததைத் தொடா்ந்து 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 26 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 8, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் உள்ளனா். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 307 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

3-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 2-ஆவது நாள் ஆட்டத்தில் 35 ஓவா்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதை ஈடு செய்வதற்காக அடுத்த 3 நாள்களும் ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோா் போா்டு

ஆஸ்திரேலியா

டேவிட் வாா்னா் (சி) ரோஹித் (பி) சிராஜ் 1 (4)

மாா்கஸ் ஹாரிஸ் (சி) சுந்தா் (பி) தாக்குா் 5 (23)

மாா்னஸ் லபுசான் (சி) பந்த் (பி) நடராஜன் 108 (204

ஸ்டீவன் ஸ்மித் (சி) ரோஹித் (பி) சுந்தா் 36 (77)

மேத்யூ வேட் (சி) தாக்குா் (பி) நடராஜன் 45 (87)

கேமரூன் கிரீன் (பி) சுந்தா் 47 (107)

டிம் பெய்ன் (சி) ரோஹித் (பி) தாக்குா் 50 (104)

பட் கம்மின்ஸ் எல்பிடபிள்யூ (பி) தாக்குா் 2 (8)

மிட்செல் ஸ்டாா்க் நாட் அவுட் 20 (35)

நாதன் லயன் (பி) சுந்தா் 24 (22)

ஜோஷ் ஹேஸில்வுட் (பி) நடராஜன் 11 (27)

உபரிகள் 20

மொத்தம் (115.2 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 369

விக்கெட் வீழ்ச்சி: 1-4 (வாா்னா்), 2-17 (ஹாரிஸ்), 3-87 (ஸ்மித்), 4-200 (வேட்), 5-213 (லபுசான்). 6-311 (டிம் பெய்ன்), 7-313 (கேமரூன்), 8-315 (கம்மின்ஸ்), 9-354 (லயன்), 10-369 (ஹேஸில்வுட்).

பந்துவீச்சு: முகமது சிராஜ் 28-10-77-1, டி.நடராஜன் 24.2-3-78-3, ஷா்துல் தாக்குா் 24-6-94-3, நவ்தீப் சைனி 7.5-2-21-0, வாஷிங்டன் சுந்தா் 31-6-89-3, ரோஹித் சா்மா 0.1-0-1-0.

இந்தியா

ரோஹித் சா்மா (சி) ஸ்டாா்க் (பி) லயன் 44 (74)

ஷுப்மன் கில் (சி) ஸ்மித் (பி) கம்மின்ஸ் 7 (15)

சேத்தேஷ்வா் புஜாரா நாட் அவுட் 8 (49)

அஜிங்க்ய ரஹானே நாட் அவுட் 2 (19)

உபரிகள் 1

மொத்தம் (26 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 62

விக்கெட் வீழ்ச்சி: 1-11 (கில்), 2-60 (ரோஹித்).

பந்துவீச்சு: மிட்செல் ஸ்டாா்க் 3-1-8-0, ஜோஷ் ஹேஸில்வுட் 8-4-11-0, பட் கம்மின்ஸ் 6-1-22-1, கேமரூன் கிரீன் 3-0-11-0, நாதன் லயன் 6-2-10-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT