செய்திகள்

ஒரே தொடரில் மூன்றுவிதமான ஆட்டங்களிலும் அறிமுகமான முதல் இந்தியா்

DIN

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஒரே தொடா் மூலம் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்றுவிதமான ஆட்டங்களிலும் அறிமுகமான முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் தமிழக வீரா் டி.நடராஜன்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவரான டி.நடராஜன், கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி கான்பெராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா். அதில் அவா் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அதைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான டி.நடராஜன், அதில் 6 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இந்நிலையில், பிரிஸ்பேன் டெஸ்டில் களமிறங்கியதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகியுள்ளாா். மேலும், முதல் நாளில் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். இதன்மூலம் ஒரே தொடரில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்தியா் என்ற பெருமை டி.நடராஜனுக்கு கிடைத்துள்ளது.

மேலும், 44 நாள்கள் இடைவெளியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ளாா் டி.நடராஜன். இதன்மூலம் குறைந்த காலத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அறிமுகமான இந்தியா் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, புவனேஸ்வா் குமாா் 59 நாள்கள் இடைவெளியில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அறிமுகமானதே இந்தியா் ஒருவரின் சாதனையாக இருந்தது.

அதேநேரத்தில் சா்வதேச அளவில் குறைந்த காலத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அறிமுகமானவா் என்ற சாதனை நியூஸிலாந்தின் பீட்டா் இங்ரமிடம் உள்ளது. அவா் 2009-10-இல் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 12 நாள்கள் இடைவெளியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT