செய்திகள்

நடராஜனுக்குப் பிரகாசமான எதிர்காலம்: ரோஹித் சர்மா பேட்டி

DIN

4-வது டெஸ்டில் அறிமுகமாகி சிறப்பாகப் பந்துவீசியுள்ள தமிழக வீரர் நடராஜனுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. டிம் பெயின் 38, கேம்ரூன் கிரீன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 7, ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். புஜாரா 8, ரஹானே 2 ரன்களில் களத்தில் உள்ளார்கள். 

ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வெள்ளைப் பந்து ஆட்டங்களில் நேர்த்தியாகப் பந்துவீசினார் நடராஜன். அவருக்கு ஐபிஎல் போட்டி நல்லவிதமாக அமைந்தது. ஐபிஎல் போட்டியினால் உண்டான தன்னம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடினார். இந்த டெஸ்டில் ஆரம்பத்தில் துல்லியமாகப் பந்துவீசினார். 

முதல் டெஸ்டை விளையாடும் நடராஜன், தன்னுடைய பந்துவீச்சு குறித்து நன்கு அறிந்துள்ளார். இதுதான் இந்திய அணிக்குத் தேவையாக உள்ளது. அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோமோ அதைச் செய்ய முயல்கிறார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT