செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட் தேநீர் இடைவேளை: இந்தியா 62/2, ஆஸி. 369

DIN


இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்துள்ளது. 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, விஹாரி ஆகியோா் காயம் காரணமாக விளையாடவில்லை. ஷா்துல் தாக்குா், டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தா், மயங்க் அகா்வால் ஆகியோா் இந்த டெஸ்டில் களமிறங்கியுள்ளார்கள். தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா் ஆகியோருக்கு இது அறிமுக டெஸ்ட் ஆட்டமாகும். ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மாா்கஸ் ஹாரிஸ் அணியில் இடம்பெற்றாா்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. டிம் பெயின் 38, கேம்ரூன் கிரீன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 7, ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். புஜாரா 8, ரஹானே 2 ரன்களில் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT