செய்திகள்

கிரிக்கெட் வீரர் பாண்டியாவின் தந்தை காலமானார்

16th Jan 2021 11:48 AM

ADVERTISEMENT

 


கிரிக்கெட் பிரபலம் ஹார்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஸு காலமாகியுள்ளார். அவருக்கு வயது 71. 

2016 முதல் இந்திய அணியில் விளையாடி வரும் ஹார்திக் பாண்டியா 11 டெஸ்டுகள், 57 ஒருநாள், 43 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவருடைய சகோதரர் கிருனாள் பாண்டியா இந்திய அணிக்காக 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த வருடம், ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றவரும் மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவருமான நடாஷாவை ஹார்திக் பாண்டியா திருமணம் செய்துகொண்டார். ஜூலை மாதம் ஆண் குழந்தைக்குத் தந்தையானார் பாண்டியா.

ADVERTISEMENT

இந்நிலையில் பாண்டியா சகோதரர்களின் தந்தை ஹிமான்ஸு மாரடைப்பால் இன்று காலமாகியுள்ளார். இதையடுத்து சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் விளையாடி வரும் கிருனாள் பாண்டியா, கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி தனது இல்லத்துக்கு விரைந்துள்ளார்.  

பாண்டியா சகோதரர்களின் தந்தை மரணத்துக்கு சச்சின் டெண்டுல்கர், கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

Tags : Hardik Pandya’
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT