செய்திகள்

லாபுஷேன், ஸ்மித் மீண்டும் பாட்னர்ஷிப்: உணவு இடைவேளையில் ஆஸி. 65/2

15th Jan 2021 07:47 AM

ADVERTISEMENT


பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணி முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், நடராஜன் (அறிமுகம்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (அறிமுகம்) என அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் சிராஜ். இதையடுத்து, ஷர்துல் தாக்குர் தனது முதல் பந்திலேயே மார்கஸ் ஹாரிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், அந்த அணி 17 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்தனர். லாபுஷேன் நிதானம் காட்ட, ஸ்மித் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார்.

இதனால், உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை.

முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. லாபுஷேன் 19 ரன்களுடனும், ஸ்மித் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Tags : Gabba
ADVERTISEMENT
ADVERTISEMENT