செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தி முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (விடியோ)

15th Jan 2021 10:57 AM

ADVERTISEMENT

 

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு சிட்னி டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹாரிஸை 5 ரன்களில் வீழ்த்தினார் ஷர்துல் தாக்குர். இதன்பிறகு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது ஸ்மித் - லபுசேன் ஜோடி. ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது வாஷிங்டனின் முதல் டெஸ்ட் விக்கெட்.

ADVERTISEMENT
ADVERTISEMENT