செய்திகள்

டெஸ்டில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்

15th Jan 2021 06:02 AM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரித் பூம்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவர்களுக்குப் பதில் மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய பயணத்தின் தொடக்கத்தின்போது நடராஜன் இந்திய அணிக்கான வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவே இருந்தார். அதன்பிறகு, வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன் தற்போது அனைத்து ரக சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் கால் பதித்துவிட்டார்.

Tags : Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT