செய்திகள்

1033 vs 13 விக்கெட்டுகள்: பிரிஸ்பேனில் புதிய பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ள இந்திய அணியும் புள்ளிவிவரங்களும்

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் புள்ளிவிவரங்கள்

* இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொடரில் வேறு எந்த அணியும் இத்தனை வீரர்களைப் பயன்படுத்தியதில்லை. 2013-14ல் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதற்கு முன்பு 18 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. அதேபோல 1998-99ல் தென் ஆப்பிரிக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 வீரர்களைப் பயன்படுத்தியது. 

* இந்த டெஸ்ட் தொடரில் இரு இந்திய வீரர்கள் மட்டுமே நான்கு டெஸ்டுகளையும் விளையாடியுள்ளார்கள். புஜாரா, ரஹானே. 

* 44 நாள்கள் இடைவெளியில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகி, டெஸ்டிலும் அறிமுகமாகியுள்ளார் நடராஜன். வேறு எந்த இந்திய வீரரும் இவ்வளவு குறைந்த இடைவெளியில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானதில்லை. டிசம்பர் 2-ல் கான்பெராவில் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். இரு நாள்கள் கழித்து டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். இதற்கு குறைந்த நாள்களில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமானவர் புவனேஷ்வர் குமார். நியூசிலாந்து வீரர் இங்க்ரம் 12 நாள்கள் இடைவெளியில் மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமானார். 

பிரிஸ்பேன் டெஸ்ட்: அனுபவமே இல்லாத பந்துவீச்சாளர்களுடன் தில்லாகக் களமிறங்கிய இந்திய அணி

சிராஜ் - 2 டெஸ்டுகள்
சைனி - 1 டெஸ்ட் 
தாக்குர் - 1 டெஸ்ட்
வாஷிங்டன் சுந்தர் - அறிமுகம் 
நடராஜன் - அறிமுகம் 

* இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான சிராஜ் தான் பிரிஸ்பேன் டெஸ்டில் பந்துவீச்சாளர்களுக்குத் தலைமை தாங்குகிறார்.

* ஆஸ்திரேலிய அணியினர் எடுத்த மொத்த விக்கெட்டுகள்: 1033
இந்திய அணியினர் எடுத்த மொத்த விக்கெட்டுகள்: 13

1-3 டெஸ்டுகளில் இந்திய அணியின் முக்கியப் பந்துவீச்சாளர்கள்

(பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா)

240 டெஸ்டுகள், 53930 பந்துகள், 1004 விக்கெட்டுகள்

பிரிஸ்பேன் டெஸ்ட் (சிராஜ், சைனி, தாக்குர், நடராஜன், வாஷிங்டன்)

4 டெஸ்டுகள், 703 பந்துகள், 11 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT