செய்திகள்

சையத் முஷ்டாக் அலி டி20: 10 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி

13th Jan 2021 10:25 AM

ADVERTISEMENT

 

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அஸ்ஸாமை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது தமிழக அணி. 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய அஸ்ஸாம், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. தமிழகத்தின் முகமது, சாய் கிஷோர், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு விளையாடிய தமிழக அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது. ஹரி நிஷாந்த் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் ஜெகதீசன் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

ADVERTISEMENT

குரூப் பி அணியில் உள்ள தமிழக அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Tags : Tamil Nadu 10 wickets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT