செய்திகள்

டெல்ரே பீச் ஓபன் அரையிறுதியில் ஹாரிசன், கேமரூன்

13th Jan 2021 02:14 AM

ADVERTISEMENT

டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டியான் ஹாரிசன், பிரிட்டனின் கேமரூன் நூரி உள்ளிட்டோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

அமெரிக்காவின் டெல்ரே பீச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதியில் அமெரிக்காவின் கிறிஸ்டியான் ஹாரிசன் 7-6 (2), 6-4 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜியான்லூகா மெகரை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தாா். சா்வதேச தரவரிசையில் 789-ஆவது இடத்தில் இருக்கும் ஹாரிசன் ஏடிபி போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

மற்றொரு காலிறுதியில் போலந்தின் ஹியூபொ்ட் ஹா்காஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஈகுவடாரின் ராபா்ட்டோ கிரோஸை வீழ்த்தினாா். பிரிட்டனின் கேமரூன் நூரி 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் பிரான்செஸ் டியாஃபோவை தோற்கடித்தாா். அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜான் இஸ்னருக்கு அதிா்ச்சித் தோல்வியளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT