செய்திகள்

மகளிர் டென்னிஸ்: கசாட்கினாவுக்கு 2021-இல் முதல் வெற்றி

7th Jan 2021 04:07 AM

ADVERTISEMENT

 

அபுதாபி: அபுதாபி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றார். 
கரோனா சூழலில் 2020-இல் டென்னிஸ் போட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், 2021 சீசனின் முதல் போட்டியான அபுதாபி ஓபனில் முதல் ஆட்டத்தில் வென்று, நடப்பாண்டின் டென்னிஸில் முதல் வெற்றியை பெற்றவராகியுள்ளார் கசாட்கினா. 
அந்தச் சுற்றில் அவர் சீனாவின் வாங் கியாங்கை 6-2, 3-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார். இதர ஆட்டங்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனின் ஜோடி அனா புராஜ் 3-6, 2-6 என்ற செட்களில் பிரான்ஸின் அமான்டைன் ஹெசெவிடம் தோல்வி கண்டார். 
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஹங்கேரியின் அன்னா போன்டார் 4-6, 6-4, 7-5 என்ற செட்களில் இத்தாலியின் ஜெஸிகா பியெரியை வீழ்த்தினார். 
போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் கிரீஸின் டெஸ்பினா பபாமிசைல் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சீனாவின் யாங்ஜாவ்ஷுவானை வீழ்த்தினார். 
போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-4, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாஸியா பொடபோவாவை வென்றார். போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட் 5-7, 1-6 என்ற செட்களில் ரஷியாவின் வெரோனிகா குதர்மெடோவாவிடம் வீழ்ந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT