செய்திகள்

மெல்போர்ன் டெஸ்ட்: ரசிகருக்கு கரோனா

7th Jan 2021 04:04 AM

ADVERTISEMENT

 

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து டிசம்பர் 27-ஆம் தேதி அந்த மைதானத்தில் "ஜோன் 5' பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
"தி டெலிகிராஃப்' பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, சுமார் 30 வயது கொண்ட அந்த நபர் முதலில் மைதானத்துக்கு வரும்போது தொற்று பாதிப்பு இருக்கவில்லை என்றும், மைதான வளாகத்திலோ அல்லது அருகிலுள்ள வர்த்தக வளாகத்திலிருந்தோ அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
2-ஆவது டெஸ்டின்போது மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 30,000 ரசிகர்கள் 
இருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT