செய்திகள்

இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு கரோனா

4th Jan 2021 07:37 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தது.

இலங்கை புறப்படுவதற்கு முன் அனைத்து வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பதே கண்டறியப்பட்டது. 

ஆனால், ஹம்பந்தோட்டா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மொயீன் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மொயீன் அலியுடன் கிறிஸ் வோக்ஸ் நெருக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளார். மேலும் அவருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இங்கிலாந்து வீரர்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 2-வது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில் இங்கிலாந்து வீரர்கள் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT