செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 24-வது சதமடித்தார் கேன் வில்லியம்சன்

4th Jan 2021 10:25 AM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தனது 24-வது சதத்தை அடித்துள்ளார் நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன்.

கிறைஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் 2-வது நாளான இன்று அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது நியூசிலாந்து அணி. கேப்டன் கேன் வில்லியம்சன் 140 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 24-வது டெஸ்ட் சதம். தனது அரை சதத்தை 105 ரன்களில் எடுத்த வில்லியம்சன், அடுத்த 50 ரன்களை 35 பந்துகளில் எடுத்து அசத்தினார். 75 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி. வில்லியம்சன் 107, நிகோல்ஸ் 79 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டை 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT