செய்திகள்

ரஹானேவை வீழ்த்த புதிய திட்டங்கள்: ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் லயன்

4th Jan 2021 05:28 PM

ADVERTISEMENT

 

ரஹானேவை வீழ்த்த திட்டங்கள் வைத்துள்ளதாக ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் பற்றி ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியதாவது:

மெல்போர்னில் சிறப்பாக விளையாடினார் ரஹானே. எனவே அவரையும் வேறு சில வீரர்களையும் வீழ்த்த சில திட்டங்களுடன் வந்துள்ளேன். அத்திட்டங்களைச் செயல்படுத்த ஆர்வமாக உள்ளேன். 

ரஹானே, உலகத்தரமான பேட்ஸ்மேன். யாரிடமும் அவர் வாக்குவாதம் செய்ய மாட்டார். நிதானத்துடன் ஆட்டத்தை எதிர்கொள்கிறார். விராட் கோலி இல்லாத இத்தருணத்தில் அணியை நன்கு வழிநடத்துகிறார். எனவே அவருக்கு எதிரான திட்டங்களுடன் களமிறங்குகிறோம். ரோஹித் சர்மாவை வீழ்த்தவும் திட்டங்கள் வைத்துள்ளோம். எனவே அவரை எளிதில் வீழ்த்த எண்ணுகிறோம் என்றார். 

Tags : Rahane Lyon
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT