செய்திகள்

ஜேமிசன் 5 விக்கெட்டுகள்: 297 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

3rd Jan 2021 04:25 PM

ADVERTISEMENT


நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீச முதல் விக்கெட்டாக ஷான் மசூத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ஆபித் அலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹாரிஸ் சோஹைல் மற்றும் ஃபவாத் அலாம் முறையே 1 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, அனுபவ வீரர் அசார் அலி மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். ரிஸ்வான் துரிதமாக ரன் சேர்க்க மீண்டும் ஒரு அரைசதத்தை அடித்தார். 

இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்திருந்தபோது ரிஸ்வான் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அசார் அலியும் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் ஸஃபார் கோஹர் ஓரளவு ரன் சேர்த்து நம்பிக்கையளித்தனர். இருவரும் முறையே 48 மற்றும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இத்துடன் முதல் நாள் ஆட்டமும் முடிவு வந்ததாக ஆட்ட நடுவர்கள் அறிவித்தனர்.

கடைசி 2 விக்கெட்டுகளை டிரெண்ட் போல்ட் வீழ்த்த பாகிஸ்தான் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும், டிம் சௌதி மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : Rizwan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT