செய்திகள்

24 மணி நேர கண்காணிப்பில் கங்குலி: மருத்துவர்

2nd Jan 2021 06:19 PM

ADVERTISEMENT


பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார் என்றும் அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் உட்லாண்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் அஃதாப் கான் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் மருத்துவர் தெரிவித்ததாவது:

"சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார்."

Tags : Sourav Ganguly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT