செய்திகள்

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து டேல் ஸ்டெய்ன் விலகல்

2nd Jan 2021 02:52 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.

2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.

இந்நிலையில் ட்விட்டரில் ஸ்டெய்ன் கூறியதாவது:

ADVERTISEMENT

அனைவருக்கும் சிறிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு விளையாடுவதிலிருந்து நான் விலகுகிறேன். வேறொரு அணிக்கு விளையாடவும் போவதில்லை. அச்சமயத்தில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இதுதொடர்பான புரிதலுக்காக ஆர்சிபிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் மற்ற லீக்குகளில் விளையாடவுள்ளேன். நான் ஓய்வு பெறவில்லை என்றார்.

Tags : Dale Steyn IPL 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT