செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி: செளரவ் கங்குலிக்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

2nd Jan 2021 04:15 PM

ADVERTISEMENT

 

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. 

இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கங்குலியின் உடல்நிலை பற்றி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ADVERTISEMENT

இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மதியம் 1 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ரத்த அழுத்தம் 130/80 என்கிற அளவில் உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவருக்குத் தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

Tags : Sourav Ganguly angioplasty
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT