பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி பிரபல கிரிக்கெட் செய்தியாளர் போரியா மஜும்தார் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
ADVERTISEMENT
அவருக்கு இதயநோய் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நலம்பெற அவரை வாழ்த்துகிறேன் என்றார்.