செய்திகள்

மும்பை டி20 அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்

2nd Jan 2021 04:41 PM

ADVERTISEMENT

 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சேர்க்கப்பட்டுள்ளார்.  

கரோனா சூழல் காரணமாக உள்நாட்டு போட்டிகள் தாமதமான நிலையில், அதில் முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை வரும் ஜனவரி 10 முதல் 31-ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் தேர்வாகியுள்ளார். மும்பை அணி அறிவித்துள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 22 பேர் கொண்ட அணியில் முதல்முறையாக 21 வயது அர்ஜூன் தேர்வாகியுள்ளார். 

ADVERTISEMENT

இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இதற்கு முன்பு பணியாற்றியுள்ள அர்ஜூன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

Tags : mumbai Arjun Tendulkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT