செய்திகள்

ஆல்ரவுண்டர் யூசுப் பதானின் மறக்க முடியாத சாதனைகள்!

27th Feb 2021 05:17 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் ஆடுகளத்தில் மறக்க முடியாத பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய யூசுப் பதான், ஓய்வு அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

38 வயது யூசுப் பதான், 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யூசுப் பதான், 2012-ல் கடைசியாக விளையாடினார். 100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். ஐபிஎல் போட்டியின் 2-வது அதிவேக சதம் அது. இந்திய வீரர்களில் முதலிடம். கடைசியாக 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 174 ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 2007-லிலும் கேகேஆர் அணிக்காக 2012 மற்றும் 2014-லிலும் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். 

ADVERTISEMENT

அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் யூசுப் பதான். அதன் தொகுப்பு:

* 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.

* 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.

* மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். (ஒருமுறை ராஜஸ்தானுக்காகவும் இருமுறை கொல்கத்தாவுக்காகவும்) 

* 2008 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

* ஐபிஎல் போட்டியின் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (37 பந்துகள்)

* ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்த வீரர்களில் 2-ம் இடம் (15 பந்துகள்).

* தென் ஆப்பிரிக்காவில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (68 பந்துகள்)

* முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர்களில் 2-ம் இடம் (51 பந்துகள்)

* ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சிக்ஸர்களும் டி20 கிரிக்கெட்டில் 17 சிக்ஸர்களும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 158 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

* ஐபிஎல் போட்டியில் 16 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்திய வீரர்களில் 3-ம் இடம்.

* 2009-10 துலீப் கோப்பை இறுதிச்சுற்றில் 536 ரன்களை விரட்டியபோது ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் எடுத்து அசத்தினார். 

Tags : Retirement Yusuf Pathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT