செய்திகள்

விஜய் ஹசாரே: மீண்டும் அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பிய ஷிகர் தவன்!

27th Feb 2021 06:04 PM

ADVERTISEMENT

 

பிரபல வீரர் ஷிகர் தவன், இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில், முதல் மூன்று ஆட்டங்களில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரு ஆட்டங்களில் டக் அவுட் ஆனார். எனினும் கடினமான இலக்கைத் தனது அணி எதிர்கொண்டபோது மீண்டும் ஃபார்முக்கு வந்து அசத்தியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற தில்லிக்கு எதிரான விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் மஹாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அசிம் கஸி 91 ரன்களும் கெதர் ஜாதவ் 86 ரன்களும் எடுத்தார்கள்.

இந்நிலையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தில்லி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் ஷிகர் தவன்.

ADVERTISEMENT

தொடக்க வீரர் துருவ் ஷோரே 61 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவன், 118 பந்துகளில் 1 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்தார். இதனால் தில்லி அணி, 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ள 35 வயது ஷிகர் தவன், மீண்டும் தனது அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags : Shikhar Dhawan Vijay Hazare Trophy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT