செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்: இந்திய மகளிர் அணிகள் அறிவிப்பு!

27th Feb 2021 02:53 PM

ADVERTISEMENT

 

ஒருநாள், டி20 தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் லக்னெள நகரில் நடைபெறுகிறது. மார்ச் 7 முதல் ஒருநாள் தொடரும் மார்ச் 20 முதல் டி20 தொடரும் தொடங்குகின்றன. 

இந்த இரு தொடர்களுக்குமான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகா பாண்டே, தான்யா பாடியா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. 

ADVERTISEMENT

இந்திய ஒருநாள் மகளிர் அணி

மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூணம் ராவுத், பிரியா புனியா, யாஷ்திகா பாடியா, ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), டி. ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஸ்வேதா வர்மா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ராஜேஸ்வரி கயாக்வட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, பூணம் யாதவ், சி. பிரதியுஷா, மோனிகா படேல்.

இந்திய டி20 மகளிர் அணி

ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷாஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), நுசாத் பர்வீண் (விக்கெட் கீப்பர்), ஆயுசி சோனி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்,  ராஜேஸ்வரி கயாக்வட், பூணம் யாதவ், மன்சி ஜோஷி, மோனிகா படேல், சி. பிரதியுஷா, சிம்ரன் தில் பகதூர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT