செய்திகள்

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

27th Feb 2021 08:19 PM

ADVERTISEMENT


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. அங்கு கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் போட்டி இடமாற்றம் செய்யப்படலாம் என சந்தேகங்கள் எழுந்தன.

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் விகாஸ் ககத்கார் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிக்கை வெளியிட்டது. 

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

"மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் தீவிரத் தன்மையை உணர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலுக்குப் பிறகு ஒருநாள் தொடர் ஆட்டங்களை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது."

Tags : England
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT