செய்திகள்

ரோம் மல்யுத்தப் போட்டி: பஜ்ரங், வினேஷ் பங்கேற்பு

DIN

புது தில்லி: ரோம் நகரில் மார்ச் 4 முதல் 7 வரை நடைபெறவுள்ள மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் 34 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
கரோனா சூழலில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை தவிர்த்த பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், இப்போட்டியில் பங்கேற்கின்றனர். ஊக்கமருந்து குற்றச்சாட்டில் 4 ஆண்டு தடைக்குப் பிறகு களத்துக்கு திரும்பியுள்ள நர்சிங் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் பங்கேற்போரில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டனர். அணி விவரம் வருமாறு: 
ஃப்ரீ ஸ்டைல்: ரவி குமார் (57 கிலோ), பங்கஜ் (57 கிலோ), பஜ்ரங் (65 கிலோ), ரோஹித் (65 கிலோ), விஷால் காளிராமன் (79 கிலோ), சந்தீப் சிங் மான் (74 கிலோ), நர்சிங் யாதவ் (74 கிலோ), ஜிதேந்தர் (74 கிலோ), ராகுல் ரதி (79 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), பர்வீன் சாஹர் (86 கிலோ), பிரவீண் (92 கிலோ), சத்யவர்த் கடியான் (97 கிலோ), சுமித் (125 கிலோ). 
கிரேக்கோ ரோமன்: அர்ஜுன் ஹலகுர்கி (55 கிலோ), மணீஷ் (60 கிலோ), நீரஜ் (63 கிலோ), கெüரவ் துஹூன் (82 கிலோ), குல்தீப் மாலிக் (72 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), ஹர்பிரீத் சிங் (82 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), தீபான்ஷு (97 கிலோ), நவீன் (130 கிலோ). 
மகளிர்: மீனாக்ஷி (50 கிலோ), வினேஷ் (53 கிலோ), நந்தினி பாஜிராவ் (53 கிலோ), அன்ஷு (57 கிலோ), சரிதா (59 கிலோ), சோனம் (62 கிலோ), சாக்ஷி மாலிக் (62 கிலோ), நிஷா (65 கிலோ), அனிதா (68 கிலோ), கிரன் (76 கிலோ).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT