செய்திகள்

பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் படுகாயம்!

24th Feb 2021 11:40 AM

ADVERTISEMENT

 

கோல்ப் விளையாட்டின் மிகச்சிறந்த வீரராகக் கருதப்படும் டைகர் உட்ஸ், கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ், 15 மேஜர் பட்டங்களை வென்றதுடன் நீண்ட காலம் நெ.1 வீரராக இருந்தவர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். உலகம் முழுக்க இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் ஹில்ஸ் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை டைகர் உட்ஸ் காரில் பயணம் செய்தார். மலையிறக்கத்தில் திடீரென உட்ஸின் கட்டுப்பாட்டை இழந்த கார், உருண்டு சென்று கவிழ்ந்தது. இதில் உட்ஸுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள். காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் தீயணைப்புத்துறை ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து உட்ஸை காரிலிருந்து மீட்டுள்ளார்கள். கார் பயணத்தில் உட்ஸுக்கு ஏற்படும் 3-வது விபத்து இது.  

ADVERTISEMENT

விபத்தினால் உட்ஸின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்ஸின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

Tags : Tiger Woods car crash
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT