செய்திகள்

இரவு உணவு இடைவேளை: இந்தியா விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள்

24th Feb 2021 07:11 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் இரவு உணவு இடைவேளையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக ஆமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து பேட்டிங்: https://bit.ly/3pPuPY4

ADVERTISEMENT

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் வழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் 5 ஓவர்கள் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பாதுகாத்து விளையாடினார்.

இதையடுத்து, இரவு உணவு இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 5 ரன்களுடனும், கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT