செய்திகள்

49 நிமிடங்கள், 27 பந்துகள்: முதல் ரன்னுக்கு கில் எடுத்துக்கொண்ட நேரம்

24th Feb 2021 08:14 PM

ADVERTISEMENT


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 49 நிமிடங்களுக்குப் பிறகு 27-வது பந்தில் முதல் ரன்னை எடுத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி இரவு உணவு இடைவேளையில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்தது. 5 ரன்களையும் ரோஹித் சர்மாவே எடுத்திருந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர் பிராட்டின் சிறப்பான பந்துவீச்சில் ரோஹித் மற்றும் கில் ரன் குவிக்கத் திணறினர். குறிப்பாக கில் நீண்ட நேரமாக தனது முதல் எடுக்க சிரமப்பட்டார். 

ADVERTISEMENT

உணவு இடைவேளைக்கு முன்பு ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆக, ஆனால் நடுவரின் முடிவில் அது அவுட் இல்லை என்று தெளிவானது. இதனால், கில் தப்பினார். நடுவரின் இந்த முடிவு இங்கிலாந்து வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, உணவு இடைவேளைக்குப் பிறகு பிராட் பந்தில் எல்பிடபிள்யு கேட்கப்பட்டது. நடுவர் கொடுக்கவில்லை. இங்கிலாந்து ரிவியூ செய்தது. அதில் பந்து முழுவதுமாக ஸ்டம்புகளைத் தகர்க்காததால், களத்தில் எடுக்கப்பட்ட நடுவரின் முடிவே இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் அவுட் கொடுக்காததால் கில் 2-வது முறையும் தப்பித்தார்.

இந்த நெருக்கடியில் இருந்த அவர் ஒரு வழியாக 49 நிமிடங்களுக்குப் பிறகு 27-வது பந்தில் முதல் ரன்னை எடுத்தார். அதுவும் பவுண்டரி அடித்து அந்த ரன் கணக்கைத் தொடங்கினார் கில்.

Tags : Gill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT