செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்டுகள்: ஜாகீர் கானை முந்தினார் அஸ்வின்

24th Feb 2021 08:40 PM

ADVERTISEMENT


சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 599 ஆக உயர்ந்தது. 

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கபில் தேவ் 687 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் தற்போது அஸ்வின் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக 597 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜாகீர் கான் 4-வது இடத்தில் இருந்தார்.
 

Tags : ashwin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT