செய்திகள்

மகள் குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜனின் உருக்கமான பதிவு

23rd Feb 2021 01:00 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது மகள் ஹன்விகா குறித்து உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மார்ச் 8 அன்று நிறைவுபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் புணே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் இடம்பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் தன்னுடைய நான்கு மாதக் குழந்தை ஹன்விகா பற்றி ட்விட்டரில் நடராஜன் எழுதியதாவது:

எங்களுடைய குட்டி தேவதை ஹன்விகா. நீதான் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசு. உன்னால் தான் எங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் பெற்றோராகத் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி லட்டு. உன்னை எப்போதும் விரும்புவோம் என்று கூறி தனது குடும்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Tags : Daughter T Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT