செய்திகள்

இலங்கை: மலிங்காவுக்குப் பதிலாக புதிய டி20 கேப்டன் நியமனம்!

23rd Feb 2021 12:06 PM

ADVERTISEMENT

 

இலங்கை அணியின் புதிய டி20 கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி  மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இலங்கையின் டி20 அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இலங்கை டி20 அணியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். எனினும் கடந்த சில மாதங்களாக அணியின் பயிற்சி முகாமில் மலிங்கா பங்கேற்கவில்லை. இதனால் புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2019-ல் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அணிக்கு ஷனகா கேப்டனாகச் செயல்பட்டார். டி20 தொடரை 3-0 என இலங்கை அணி வென்றது. 29 வயது ஷனகா, 6 டெஸ்டுகள், 22 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ADVERTISEMENT

மார்ச் 3 முதல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கு டிமுத் கருணாரத்னே, இலங்கை அணியின் கேப்டனாகச் செயல்படுவார். 
 

Tags : Dasun Shanaka Sri Lanka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT