செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20: சரிவிலிருந்து நியூசி. அணியை மீட்டு அதிரடியாக 99 ரன்கள் எடுத்த கான்வே!

22nd Feb 2021 01:39 PM

ADVERTISEMENT

 

29 வயது டெவோன் கான்வே இதுவரை 6 டி20 ஆட்டங்களில் விளையாடி இரு அரை சதங்கள் எடுத்துள்ளார்.

இன்று அவருக்கு மகத்தான நாளாக அமைந்துவிட்டது.

இடது கை பேட்ஸ்மேனான கான்வே இன்றைய டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டதோடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ADVERTISEMENT

கிறைஸ்டர்ச்சரில் நடைபெற்று வரும் முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும் டிம் சைஃபர்ட் 1 ரன்னிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 4 ஓவர்களுக்குள் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி.

எனினும் டெவோன் கான்வேயின் அதிரடி ஆட்டம் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணியது. 36 பந்துகளில் அரை சதமெடுத்த கான்வே, அதன்பிறகு மேலும் விரைவாக ரன்கள் குவித்தார். கடைசி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார் கான்வே. கிளென் பிளிப்ஸ் 30 ரன்களும் நீஷம் 20 ரன்களும் எடுத்தார்கள். 

Tags : Devon Conway New Zealand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT