செய்திகள்

ஆஸி. ஓபன் தொடர்: ஒசாகா சாம்பியன்

20th Feb 2021 03:58 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார். 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றானஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையா் இறுதிச்சுற்றில் உலகின் நெ.3 வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடியை இன்று எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் அமெரிக்காவின் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். 2 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  
 

Tags : Australian Open 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT