செய்திகள்

இந்த நாள் இந்தியாவுக்கான நாள்: 2-ம் நாள் முடிவில் 249 ரன்கள் முன்னிலை

14th Feb 2021 04:35 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 195 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஷுப்மன் கில் இந்த இன்னிங்ஸில் ரன் கணக்கைத் தொடங்கினார். எனினும், அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 14 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் லீச் சுழலில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ரோஹித்துடன் புஜாரா இணைந்தார். இந்த இணை ஆட்டநேரம் முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.

ADVERTISEMENT

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ரோஹித் 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
 

Tags : Rohit Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT