செய்திகள்

டெண்டுல்கர் - குக் கோப்பை: இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை

11th Feb 2021 10:50 AM

ADVERTISEMENT

 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு டெண்டுல்கர் - குக் கோப்பை எனப் பெயரிட வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை வைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.  இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு டெண்டுல்கர் - குக் கோப்பை எனப் பெயரிட வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி அவர் ட்வீட் செய்ததாவது:

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெண்டுல்கர் - குக் கோப்பை என அழைக்கப்பட வேண்டும். இருவரும் அவரவர் நாடுகளுக்காக அதிக டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்கள். ஒருவருக்கொருவர் எதிர்த்து பல டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள். டெண்டுல்கர் போன்ற மகத்தான வீரரின் பெயரில் எந்தவொரு கோப்பையும் இல்லை என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் விளையாடப்படும்போது, பட்டோடி கோப்பை என்றும் இந்தியாவில் விளையாடப்படும்போது அந்தோனி டி மெல்லோ கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை போத்தம் கபில் கோப்பை என்றும் அழைக்கலாம். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை இம்ரான் கபில் கோப்பை என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்றும் பனேசர் கூறியுள்ளார். 
 

Tags : Panesar Tendulkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT