செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

11th Feb 2021 05:32 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் விளையாடவுள்ள டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்று தொடங்குகிறது. 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மார்ச் 8 அன்று நிறைவுபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் புணே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையிலான அணியில் லியம் லிவிங்ஸ்டோன் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். பிக் பாஷ் போட்டியில் நன்றாக விளையாடியும் அலெக்ஸ் ஹேல்ஸ், அணியில் சேர்க்கப்படவில்லை. 

இங்கிலாந்து அணி: இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், டாம் கரண், கிறிஸ் ஜோர்டன். லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ், டாப்லி, மார்க் வுட்.

மாற்று வீரர்கள்: ஜேக் பால், மேட் பார்கின்சன். 

Tags : England T20I squad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT