செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மாற்றப்படுகிறது ஆடுகளம்

11th Feb 2021 04:41 AM

ADVERTISEMENT

 

முதல் டெஸ்ட் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளமானது, 3-ஆம் நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக மாறியிருந்தது. இந்நிலையில், 2-ஆவது டெஸ்டின்போது முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திசை திரும்பக் கூடிய வகையில் ஆடுகளம் அமைக்கப்படவுள்ளது. அதற்காக முதல் டெஸ்ட் நடைபெற்ற ஆடுகளத்துக்கு அருகிலேயே சற்று புற்களுடன் இருக்கும் மற்றொரு ஆடுகளத்தை 2-ஆவது டெஸ்ட்டுக்கு பயன்படுத்தவுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்டுக்கான ஆடுகளத்தை தயாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் குமார், மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களுக்கான பிசிசிஐ கமிட்டியின் தலைவர் தபோஷ் சாட்டர்ஜி ஆகியோரின் மேற்பார்வையில் 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆடுகளம் தயாராகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT