செய்திகள்

பயிற்சியில் அக்ஸர் படேல்; வெளியேறுகிறார் நதீம்?

11th Feb 2021 04:40 AM

ADVERTISEMENT


புது தில்லி: இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதில் அக்ஸர் படேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. 
முதல் டெஸ்டில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீமை தேர்வு செய்ததில் தவறில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தாலும், நதீமின் பெüலிங் சிறப்பாக இல்லாமல் போனது குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தார். 
இங்கிலாந்து இன்னிங்ஸின்போது அஸ்வின், பும்ரா, இஷாந்த் ஆகியோரைப் போல அந்த அணிக்கு நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தரால் நெருக்கடி அளிக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார். 
முதல் டெஸ்டில் நதீம் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும் மொத்தமாக 59 ஓவர்களில் 233 ரன்கள் வழங்கியிருந்தார். பெüலிங் வீசும்போது கிரீûஸ தாண்டிக் குதிக்கும் கணத்தில் தனக்கு சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதை சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் ஷாபாஸ் நதீமே கூறியுள்ளார். 
இந்நிலையில், பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "அக்ஸர் படேலுக்கு முழங்காலில் லேசான வலி உள்ளது. அதிலிருந்து மீண்டு வரும் அவர் ஏற்கெனவே வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார். அடுத்த இரு நாள்களில் அவர் பெüலிங்கிலும் பயற்சியை தொடங்கிவிடுவார். 
டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துக்கு எப்போதுமே அக்ஸர் படேல் பிரதான தேர்வாகவே இருந்து வந்துள்ளார். எனினும் இறுதி தேர்வானது கேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பெüலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரின் முடிவைப் பொருத்ததே' என்றன. 
இதனிடையே, முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரும் பெüலிங்கில் சற்று தடுமாறியிருந்தார். 26 ஓவர்கள் வீசி 98 ரன்கள் வழங்கியிருந்த அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனினும், முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததன் அடிப்படையில் 2-ஆவது டெஸ்டிலும் அவர் பிளேயிங் லெவனில் தன்னை தக்கவைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT