செய்திகள்

'அன்றே எச்சரித்தேன், நினைவு இருக்கிறதா': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் ட்வீட்

9th Feb 2021 07:29 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் சுட்டுரையில் பதிவிட்டது:

"ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா" என்று பதிவிட்டுள்ளார் பீட்டரச்ன்.

ADVERTISEMENT

முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பீட்டர்சன் தெரிவித்தது:

"பல தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள் இந்தியா. எனினும் உண்மையான அணி இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்."
 

ADVERTISEMENT
ADVERTISEMENT