செய்திகள்

எந்தவொரு இந்திய சுழற்பந்துவீச்சாளரும் சாதிக்காததை சாதித்த அஸ்வின் (விடியோ)

8th Feb 2021 07:16 PM

ADVERTISEMENT


டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் தன்வசப்படுத்தினார்.

ADVERTISEMENT

இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28-வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.


 

Tags : ashwin
ADVERTISEMENT
ADVERTISEMENT