செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் ஆஸி. வீரர் ஸ்டார்க் கலந்து கொள்ளாதது ஏன்?

6th Feb 2021 11:30 AM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கட்டாயமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், வீரர்கள் ஏலத்தில் தன்னுடைய பெயரைப் பதிவு செய்யாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வீரா்கள் பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் கடந்த வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது.

தற்போதைய நிலையில், 1,097 போ் பெயரை பதிவு செய்துள்ளனா். ஏலப்பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த 814 வீரா்கள், 283 சா்வதேச வீரா்கள் இடம்பெற்றுள்ளனா். 

ADVERTISEMENT

மேற்கிந்திய தீவுகளில் இருந்து அதிகபட்சமாக 56 பேரும், அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 42 பேரும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 38 பேரும் பங்கேற்கின்றனா். 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது பெயரைப் பதிவு செய்யவில்லை. 

கடைசியாக 2015-ல் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஸ்டார்க் விளையாடினார். இதுவரை இரு வருடங்களில் மட்டுமே விளையாடியுள்ள ஸ்டார்க், 27 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 7.16.

காயங்கள் மற்றும் ஓய்வு காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. இம்முறை தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் ரத்தானதாலும் டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாலும் ஐபிஎல் 2021 போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. அதில் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என்கிற முடிவை ஸ்டார்க் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT